கடந்த மாதத்தின் ஒரு வார இறுதியில் ஒஸ்ரேலிய பாராளுமன்றுக்கு சென்று பார்வையிட கூடிய வாய்ப்புக் கிடைத்தது. சிட்னியில் இருந்து கன்பெரா நோக்கிய 3 மணி நேரப் பயணம்! அதுவே மெல்பேணிலிருந்து 7 மணிநேரமாகையால் முதலில் சிட்னிக்கு விமானம் மூலம் சென்று அங்கிருக்கின்ற இரண்டு நண்பர்களோடு கன்பெரா நோக்கி புறப்பட்டேன். கன்பெராவின் மிகச் சரியான வட்டமானதும் நீள் கோடுகளுமான வீதிகளுக்கால் சென்று பாராளுமன்றை அடைந்தோம். கன்பெராவின் வரைபடத்தினை நோக்கும் போது மிகத் தெளிவாகவே அது செயற்கையாக உருவாக்கப்பட்ட நகரம்…
ஐரோப்பாவின் உயரத்தில்
Jungfraujoch! தமிழில் இந்த ஜேர்மன் வார்த்தையை எப்படி சரியாக உச்சரிப்பது என்று தெரியவில்லை. எனினும் கிட்டத்தட்ட அது ஜுன்ப்றோ என்னும் வார்த்தைக்கு நெருக்கமுள்ளதாக இருக்கலாம். இது போலவே Bahnhof என்னும் தொடரூந்து நிலையத்தினை குறிக்கும் ஜேர்மன் வார்த்தை, வாணப்பு என, யாரோ ஒரு அப்புவின் பெயரைச் சொல்வது போலவும் Sankt Gallen என்கிற இடத்தின் பெயர் செங்காலன் (யாரோ கரிகாலனின் தம்பி என்பது போல) என்றும் தான் எனக்கு அறிமுகமான சிலதிற் சிலவான ஜேர்மன் வார்த்தைகள் அறிமுகமாயின….
மடத்தனமாய்..
எனக்கு உடன்பாடில்லாத எழுத்துக்களையும் கருத்துக்களையும் எதிர்கொள்ளும் போதெல்லாம் பெரும்பாலும் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. ஆயினும் அக்கருத்தின் தர்க்கவியல், அவ்வாறான ஒரு கருத்து தோன்றுவதற்கு காரணமாயிருந்த சிந்தனை இவற்றை ஆராய்வதுண்டு. இவையே அக்கருத்துக்களின் சொந்தக் காரர்கள் மீது எனக்கு தனியான எந்த வெறுப்புணர்வும் தோன்றாமல் விடுவதற்குரிய காரணங்களாக இருக்கின்றன. இதற்கப்பால் இன்னுமொருவகையான கருத்துக்களையும் எழுத்துக்களையும் நான் எதிர் கொள்வதுண்டு. எழுதுகின்ற தங்களையும் சரியான மடையன்கள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டி அதை வாசிப்பவர்களையும் மடையர்களாக்கி எழுதுபவர்கள் மீது முழுதும்…
ஞாபகிக்கையில் 1
நடந்த காலங்களில் வலியையும் இரவுகளில் கண்ணீரையும் தந்த சில சம்பவங்கள் பின்னர் காலக் கிடங்கில் ஆழ அமிழ்ந்து போய் விடுகின்றன. மீண்டும் எப்போதாவது சமயங்களில் ஞாபகிக்கும் போது வலி தந்த அதே சம்பவங்களே சிரிப்பையும் ஒரு வித சுய ஏளனத்தையும் தருகின்றன. அதிகாலை 6 மணிக்கு அவள் தன் வீட்டிலிருந்து புறப்படுவாள். அதனைத் தொடர்ந்து அவளைத் தொடர்ந்து அவனும்! எப்பொழுதுமே சந்திப்புக்கள் எதேச்சையாக அமைய வேண்டும் என்பதற்காக அவன் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வான். ‘என்ன அடிக்கடி…